வங்காள தேசத்தில் கரையை கடந்த சித்ரங் சூறாவளி.! 5 பேர் உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


நேற்று  இரவு 9 மணியளவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்ட சித்ரங் சூறாவளி புயலின் முன்பகுதி, சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் கரையை கடந்தது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது என அந்நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளி புயலால் கனமழை பெய்யும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த புயலால், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் சூறாவளி புயல் கரையை கடந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த சூறாவளி புயல் அந்நாட்டின் தெற்கு பகுதியை நோக்கி மிக விரைவாக நகர்ந்து செல்கிறதனால், வங்காள விரிகுடாவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ள டாக்கா நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மரங்கள் அனைத்தும் வேருடன் சாய்ந்து விழுந்தன.

அதுமட்டுமின்றி, சாலைகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பர்குனா, நரைல், சிராஜ்கஞ்ச் மற்றும் போலா உள்ளிட்ட மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், வங்காளதேச எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியே இந்த சூறாவளியானது இன்று காலை 6 மணிக்கு பின்னர் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sitrang cyclone crossed coast five people died


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->