ஏவுகணை கொண்டு தாக்குவோம்! எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா!
Sindhu dam missile Pakistan India
அமெரிக்கா, ரஷியாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது.
இதே சமயம், இந்தியாவுடன் வர்த்தகப் போரில் இருக்கும் அமெரிக்கா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
இந்த சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
அங்கு பேசிய அவர், “சிந்து நதிக்கு குறுக்கே இந்தியா அணை கட்டினால், 10 ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம். நாங்கள் அணு ஆயுத நாடு. எங்களை வீழ்த்த முயன்றால், பாதி உலகத்தையும் எங்களுடன் அழித்துச் செல்வோம்” என்று எச்சரித்தார்.
இந்த வெளிப்படையான மிரட்டல் இந்தியாவில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை, “அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அணு மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் தளராது என்பது முன்பே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் எடுக்கப்படும்.
மேலும், நட்பு நாடான மூன்றாம் நாட்டு மண்ணிலிருந்து இப்படிப்பட்ட கருத்துகள் வெளியானது வருந்தத்தக்கது” என்று தெரிவித்தது.
English Summary
Sindhu dam missile Pakistan India