இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் மீது துப்பாக்கிச்சூடு.!!
shoot to pakisthan people in indian pakisthan border
கத்துவா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் காரர்கள் மீது இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டம் சந்த்வான், கோதே எல்லை அவுட்போஸ்ட்கள் இடையே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படையினர், ஊடுருவ இருந்தவர் பாகிஸ்தானியரை கவனித்தனர்.

அவர்களை பலமுறை வீரர்கள் எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்திய வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஊடுருவ முயன்றவர்களில் ஒருவர் காயமடைந்தார்.
உடனே அந்த நபர் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரிடம் அவருடைய அடையாளம், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின் முடிவில்தான் அவர் ஏன் ஊடுருவ முயன்றார் என்பது தெரியவரும்.
English Summary
shoot to pakisthan people in indian pakisthan border