ஆமதாபாத் விமான விபத்து: விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழல், எதுவும் முறையாக வேலை செய்யவில்லை: குஜராத்திற்கு பயணித்த நபர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ..!
Shocking video shared by a person traveling to Gujarat saying that the situation on the plane was unusual nothing was working properly
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டக்கு (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) என்ற விமானம், புறப்பட்ட 05 நிமிடங்களில், மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த விமானம் மருத்துவமனை விடுதியில் பயங்கரமாக மோதியதில் பயிற்சி மருத்துவர்கள் சாப்பிடும் இடம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 202 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மருத்துவ மாணவர்கள் விடுதியில் விமானம் மோதியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் விமானம் விழுந்த குடியிருப்பு பகுதியில் பலர் படுகாயமைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அதே விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் நோக்கி பயணம் செய்த ஆகாஷ் வத்ஷா என்ற பயணி அதிர்ச்சி வீடியோ ஒன்றை தனது க்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குறித்த ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து வீடியோவாக பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர்," அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான அதே விமானத்தில்தான் டெல்லியில் இருந்து 02 மணி நேரத்துக்கு முன்பாக அகமதாபாத் வந்தேன். விமானத்தில் இருந்தபோது ஏதோ தவறாக நிகழ்வதை உணர்ந்தேன்.
இந்த விமானத்தில் வழக்கத்துக்கு மாறான அம்சங்கள் இருந்ததைக் கவனித்தேன். விமானத்தில் இருந்த டிவி டிஸ்பிளே உள்ளிட்ட எதுவும் முறையாக வேலை செய்யவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இது குறித்து ஏர் இந்தியா விமானம் மீது கடுமையான விசாரணை நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
English Summary
Shocking video shared by a person traveling to Gujarat saying that the situation on the plane was unusual nothing was working properly