கேமர்களுக்கு ஷாக் நியூஸ்...! ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்...! - மே 1 முதல் மாற்றம்...!
Shocking news for gamers New restrictions online games Change from May 1st
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டு துறையில் புதிய ஒழுங்குமுறை மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அதற்கான விரிவான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் வரும் மே 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகின்றன என்பதால், விளையாட்டு துறையில் முக்கிய மாற்றங்கள் உருவாக உள்ளன.

இந்த விதிமுறைகளின் அடிப்படையில், சூதாட்ட அம்சங்கள் இல்லாத சாதாரண ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டாயப் பதிவு தேவையில்லை என தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் போட்டித் தன்மை மற்றும் தொழில்முறை அம்சங்கள் அதிகம் காணப்படும் ‘இ-ஸ்போர்ட்ஸ்’ விளையாட்டுகளுக்கு கட்டாயமாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு தேவைக்கேற்ப அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், குறிப்பிட்ட சில ஆன்லைன் விளையாட்டுகளை நேரடியாக கண்காணிக்க இந்த விதிகள் வழிவகை செய்கின்றன.
இதன் மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், தவறான செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக, இந்த சட்ட வடிவமைப்பு ஆன்லைன் சூதாட்ட செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, அவற்றை முற்றிலும் தடுக்க வலுவான அடித்தளமாக அமையும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Shocking news for gamers New restrictions online games Change from May 1st