காதலனை பிரிந்த நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணம்; சொகுசு ரயிலில் நிர்வாண குளியல் போட்ட 'வாம்பயர் டைரிஸ்' நடிகை..! - Seithipunal
Seithipunal


'வாம்பயர் டைரிஸ்' என்ற தொடர் மூலம் உலகமெங்கும் பிரபலமான ஹாலிவுட் நடிகை நினா டோப்ரேவ் (37), கடந்த 2025-ஆம் ஆண்டு இறுதியில் தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட காதலன் ஷான் ஒயிட் என்பவரை பிரிந்தார்.

இந்த பிரிவுக்கு பிறகு, 2026-ஆம் ஆண்டை தனது சுய முன்னேற்றத்திற்கான ஆண்டாக அவர் கொண்டாடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அவர் சொகுசு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.


அதன்படி, நேற்று நினா டோப்ரேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 'வெனிஸ் சிம்ப்ளான் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' என்ற உலகப்புகழ் பெற்ற சொகுசு ரயிலில் பயணம் செய்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதில், ஓடும் ரயிலின் ஜன்னல் ஓரம் அமர்ந்து, நுரை ததும்பும் குளியல் தொட்டியில் அவர் நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அத்துடன், அந்த புகைப்படங்களுடன், 'ரயில் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, நேரமும் அப்படித்தான்' என்று பதிவிட்டுள்ளார். சலவைக்கல் பதிக்கப்பட்ட குளியலறை கொண்ட இந்த ரயிலில், நண்பர்களுடன் இரவு உணவருந்தும் மற்றும் ஒய்வெடுக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Vampire Diaries Actress Takes a Nude Bath on a Luxury Train During European Tour


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->