தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் கடிதம்; அதில் குறிப்பிட்டுள்ளது என்ன..?
TVK Leader Vijay Writes to the Tamil Nadu Election Commission
மொத்தம் 234 தொகுதிகள் உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தளுக்கு நாளை (23ஆம் தேதி) காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. முக்கியாக பாதுகாப்பு பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்புவது உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக முடித்துள்ளது.
நேற்று 21ஆம் தேதி மாலை 06 மணியுடன் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் ஓய்வுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது;
''தேர்தல் நாளில் பிரதான சாலைகள் உள்ளிட்ட வழித்தடங்களிலும் காவல் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பெண் வாக்காளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பெண் காவலர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஒருங்கிணைப்பு பிரிவுகளிலும் பறக்கும் படைகளைச் செயல்படுத்த வேண்டும்.
சிசிடிவி கண்காணிப்பு, ட்ரோன் வரிசைப்படுத்தல் மற்றும் வீடியோ ஆவணப்படுத்தும் குழுக்கள் மூலம் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
வயதான வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குப் போதுமான குடிநீர், இருக்கை, நிழல் வசதிகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TVK Leader Vijay Writes to the Tamil Nadu Election Commission