தூத்துக்குடியில் சோகம்...! மனைவி இறந்த சில மணி நேரத்திலேயே கணவர் தற்கொலை...! - சோகத்தில் ஆழ்ந்த உறவினர்கள் - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி அருகிலுள்ள முள்ளக்காடு, நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் (67) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பளத் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், தனது மகன் பிரபாகரனுடன் வசித்து வந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவி விஜயகுமாரி புற்றுநோயால் உயிரிழந்ததையடுத்து, ஜெயராம் கடும் மன வேதனையில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டின் மாடிக்குச் சென்று ஓய்வெடுக்கிறேன் என கூறிவிட்டு மேலே சென்ற ஜெயராம், நீண்ட நேரமாக கீழே வராததால் சந்தேகமடைந்த அவரது மகன் மாலை நேரத்தில் மாடிக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுடன் இணைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் நார் கயிற்றால் தூக்கிட்டு கொண்டிருந்ததை கண்டு அவர் பதறியுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்க முயன்றபோதும், ஜெயராம் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய காவலர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy Thoothukudi Husband commits suicide few hours after wife death Relatives deep grief


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->