சந்திரனில் கால் தடம் பதிக்கப்போகும் இந்தியர்கள்...! 2040-க்குள் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ முனைப்பு..! - தலைவர் வி.நாராயணன் - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உலக விண்வெளி ஆராய்ச்சி அரங்கில் தனது திறமையையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகிறது. குறைந்த செலவில் திறமையான திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து, நிலவின் மேற்பரப்பில் வரலாற்றுச் சுவடுகளை பதித்த சாதனைகள் வரை இந்தியா தனது முத்திரையை வலுவாக பதித்து வருகிறது.

மனிதனை விண்வெளிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு திரும்பச் செய்யும் ‘ககன்யான்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இஸ்ரோ முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.

சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகும் இந்த மகத்தான முயற்சிக்காக, மூன்று ஆள் இல்லாத ராக்கெட் ஏவுதல்கள் முன்னோட்ட சோதனையாக திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது ஏவுதல் இந்த ஆண்டிலேயே நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நிலவுக்கு இந்தியர்களை அனுப்பும் மிகப்பெரிய இலக்கை நோக்கியும் இஸ்ரோ தன்னுடைய திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறது. 2040-ஆம் ஆண்டை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கு முயற்சி, நாட்டின் அறிவியல் முன்னேற்றம், புதுமை சிந்தனை மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இந்த முன்னேற்றங்கள் அனைத்தும், விண்வெளி துறையில் இந்தியாவின் எதிர்கால பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதுடன், உலகின் முன்னணி விண்வெளி வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடிக்கத் தயாராகி வருகிறது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indians going to set foot moon ISRO aims to send humans by 2040 Chairman V Narayanan


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->