அதிர்ச்சி தகவல்!தினமும் 7 பேர் பாலியல் வன்கொடுக்க வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்!
Shocking news 7 people harassement every day
மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களில் தினமும் 7 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ''ஆரிப் மசூத்'' பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் குறித்த கேள்வி கேட்டார்.

இந்தக்கேள்விக்கு அரசு தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் பட்டியலின மக்கள் 16 %-மும், பழங்குடியின மக்கள் 22 %-மும் உள்ளனர்.
இதில் கடந்த 2022 மற்றும் 2024-ம் ஆண்டுக்கு இடையில், பட்டியல் இன மற்றும் பழங்குடி இன சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக மொத்தம் 7,418 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சமூகங்களை சேர்ந்த 558 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 338 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
கூடுதலாக 1,906 எஸ்.சி. மற்றும் பழங்குடியின பெண்கள் வீட்டு வன்முறையை எதிர்கொள்கின்றனர். இதில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த பெண்களுக்கு எதிராக 44,978 குற்றங்கள் பதிவாகியுள்ளது. அதவாது ஒரு நாளைக்கு சராசரியாக 7 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Shocking news 7 people harassement every day