குஜராத்தில் அதிர்ச்சி! 50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மனைவி...! - கணவன் மற்றும் நண்பர்களின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவலம்...!
Shock Gujarat Wife sold 50 thousand Victim gang harassment by husband and friends
குஜராத்தில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையில், கணவன் ஒருவர் தனது மனைவியை பணத்திற்காக நண்பர்களிடம் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த நிகேஷ் படேல் என்பவர், கடந்த மே 11-ஆம் தேதி தனது மனைவி காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆனால், அந்த புகார் அளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு நிகேஷும் திடீரென மாயமானதால், அவரது தந்தை மீண்டும் காவல் நிலையத்தில் தனி புகாரை பதிவு செய்தார்.அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவங்கள் காவலர்களுக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த நிகேஷை கண்டுபிடித்து கைது செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வெளியான தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது மனைவியை விரும்பாமல் இருந்த நிகேஷ், அவரிடமிருந்து விலக வேண்டும் என்ற நோக்கத்தில், தனது நண்பர்களான சஞ்சய் தாக்கூர், அசோக் தாக்கூர் மற்றும் சச்சின் தர்பார் ஆகியோரிடம் ரூ.50 ஆயிரத்திற்கு மனைவியை விற்றதாக ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அந்த கும்பலின் பிடியிலிருந்த பெண்ணை காவலர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், தன்னை பணத்திற்கு விற்ற பின்னர் ஒரு தனியிடத்தில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னிடம் இருந்த தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு அவற்றை விற்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.நிகேஷ் படேலுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கிடையில் வேறு இரண்டு பெண்களுடன் நிகேஷ் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவியை விவாகரத்து செய்ய நினைத்த அவர், இறுதியில் பணத்திற்காகவே நண்பர்களிடம் ஒப்படைத்ததாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நிகேஷ் படேல் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட மொத்தம் 8 பேரை காவலர்கள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Shock Gujarat Wife sold 50 thousand Victim gang harassment by husband and friends