சொந்த குடும்ப உறுப்பினர்களாலேயே சிறுமிக்கு நடந்த கொடூரம்.. குட் டச், பேட் டச் வகுப்பால் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


சொந்த குடும்ப உறுப்பினர்கள் ஆளையே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு தனது தந்தையுடன் பீகாரில் வசிக்கும் போது பெற்ற மகள் என்றும் பாராமல் அவரது தந்தை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையே பல வருடங்களாக அவர் தொடர்ந்து உள்ளார் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி சிறுமியின் மூத்த சகோதரர் நவம்பர் 2020 இல் இருந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்ய தொடங்கியுள்ளார். மேலும் அவளது தாத்தாவும் தூரத்து மாமாவும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமிக்கு என்ன நடக்கிறது எனத் தெரியாததால் அவர் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது பள்ளியில் நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் பற்றி வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக கவனித்த போதுதான் தனக்கு என்ன நடந்தது என்பதை சிறுமி அறிந்து கொண்டுள்ளார்.

உடனடியாக இது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளார்.  இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தந்தை மற்றும் சகோதரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது அதேபோல தாத்தா மற்றும் தூரத்து மாமாவின் மீது பிரிவு 354 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில்,நடந்த சம்பவங்கள் தனித்தனியாக நடந்ததாக ஒருவருக்கு ஒருவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினர். குடும்ப உறுப்பினர்களாலேயே பல ஆண்டுகளாக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual abuse of a girl by her own family members


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->