செமிகான் 2025: சிப் உற்பத்தியை நோக்கி இந்தியாவின் அடுத்த அடிகள்...! - விக்ரம்-32 சிப்
Semicon 2025 Indias next steps towards chip manufacturing Vikram 32 chip
அண்மையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் “செமிகண்டக்டர் என்றால் என்ன?” என்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கினர். அதில் சிப் தயாரிக்க அவசியமான மூலப்பொருள் தான் 'செமிகண்டக்டர்'.
எப்படி அரிசி இருந்தால்தான் சோறு சமைக்க முடிகிறதோ, அதேபோல சிப் தயாரிக்க செமிகண்டக்டர் தேவை.இன்றைய உலகமே இந்தச் சிப் மீது இயங்குகிறது.இதில் செல்போன், லேப்டாப், கார், விமானம், ரோபோ எல்லாமே சிப் இல்லாமல் இயங்காது.

ஆனால், இந்தியா இதுவரை வெளிநாடுகளின் இறக்குமதியைப் பொறுத்து தான் இருந்தது.இந்த நிலையை மாற்ற, டெல்லியில் நடந்த “செமிகான் இந்தியா 2025” மாநாட்டில், இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட “விக்ரம்-32” சிப்-ஐ பிரதமர் மோடிக்கு வழங்கினர்.
இதனால் இனி இந்தியா செலுத்தும் செயற்கைகோள்களிலும் இதுவே பயன்படுத்தப்பட இருக்கிறது.அதுமட்டுமின்றி,செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு ரூ.76,000 கோடி திட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் தேவையான சிலிக்கான், குவார்ட்ஸ் மணல் கிடைப்பதால், சென்னை மற்றும் கோவையில் உற்பத்தி பூங்காக்கள் தொடங்கப்படுகின்றன.இவ்வாறு மிக விரைவில் இந்தியா தன்னிறைவு அடைந்து, உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்து, உலக சந்தைக்கும் சிப் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறப்போகிறது.
English Summary
Semicon 2025 Indias next steps towards chip manufacturing Vikram 32 chip