பாதுகாப்பா...? தனியுரிமை ஆபத்தா...? -மொபைல் போன்களில் புதிய கட்டாயம்‘சஞ்சார் சாத்தி’ செயலி...!
Security Privacy risk new mandatory Sanchar Saathi app on mobile phones
இந்தியாவில் விற்பனையிலுள்ள அனைத்து மொபைல் போன்களிலும் புதிய கட்டாயத்துடன் ‘சஞ்சார் சாத்தி’ பாதுகாப்பு செயலி நிறுவப்பட வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
புதிய மொபைல்கள் வரைவிலக்கான முறையில் செயலியுடன் விற்பனை செய்யப்பட வேண்டும்; பழைய மொபைல்களிலும் சாப்ட்வேர் அப்டேட்டின் மூலம் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த செயலி நிறுவப்பட்டு, நிறுவப்பட்டதைச் சான்றளிக்கும் அறிக்கையை மொபைல் நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சஞ்சார் சாத்தி செயலி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இது தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட போன்களை கண்டறிய, ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள, மற்றும் ஐ.எம்.ஐ.ஐ மோசடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுகிறது.
ஆனால், இந்த செயலி பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கும் அணுகல் பெறும் என்பதால் பொதுமக்களுக்கு கவலை அளிக்கிறது. அதாவது, அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்கவும், அந்த தகவல்களை அரசாங்கம் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பது பிரச்சனையாக உள்ளது.
English Summary
Security Privacy risk new mandatory Sanchar Saathi app on mobile phones