சாமிக்கு தேள் மாலை அணிவித்து பக்தர்கள் வினோத வழிபடு - எங்குத் தெரியுமா?
scorpians garland in andira temple
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம், கொடுமுரு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.

அப்படி வரும் பக்தர்கள் மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடிப்பிடித்து நூல்களில் மாலையாக கட்டி அதனை வெங்கடேஸ்வர சாமிக்கு அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.
தேள்களைப் பிடித்து மாலையாக கட்டும் பக்தர்களுக்கு தேள் கொட்டவில்லை.
பொதுவாக பக்தர்கள் சாமிக்கு பட்டு வஸ்திரம், மலர் மாலை மற்றும் ஆபரணங்களை அணிவித்து பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால் இந்த வெங்கடேஸ்வர சாமிக்கு தேள் மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம். இதுமட்டுமல்லாமல் சில பக்தர்கள் தேள்களை பிடித்து தங்களது முகம், தலை, கைகளில் வைத்து நூதன முறையில் வழிபாடு செய்தனர். இந்த வழிபாடு பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
English Summary
scorpians garland in andira temple