மே.வங்கத்தில் பள்ளி மாணவர்கள் மதிய உணவில் பாம்பை தொடர்ந்து பல்லி, எலி.. பொதுமக்கள் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன், பழங்கள் மற்றும் பருப்பு போன்றவைகள் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பிர்பூம் மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதியம் வழக்கம்போல் மதிய உணவு  வழங்கப்பட்டது‌. அப்போது பள்ளி மாணவர்கள் சாப்பிடும் உணவில் பாம்பு விழுந்ததை தெரியாமல் மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பினர்.

இந்த நிலையில் மீண்டும் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் சஹுர்காச்சி பித்யானந்தபுர் ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பள்ளி மாணவர்கள் மதிய உணவில் எலி மற்றும் பல்லி கிடந்ததை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School students in Bengal snakes and rats in their lunch


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->