'நானும் ஜெயலலிதாவும் ஸ்பூன் பீடிங்கில் வந்தவர்கள் இல்லை; அதிமுகவை ஒன்றிணைப்பதை நிச்சயமாக செய்வேன்'; சசிகலா உறுதி..! - Seithipunal
Seithipunal


அதிமுகவை ஒன்றிணைப்பதை நிச்சயமாக செய்வேன். சர்ப்பரைசாக எல்லாமே நடக்கும் என மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்திதிப்பில் கூறியுள்ளார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், மதுரை திருநெல்வேலியில் 10 மாதங்களில் 36 கொலைகள், சிவகங்கையில் 20 கொலைகள் நடந்துள்ளது. திமுக அரசு சென்றால் தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவை ஒன்றிணைப்பதை நிச்சயமாக செய்வேன் என்றும் அது சர்ப்பரைசாக எல்லாமே நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என கூறியுள்ளார்.

அத்துடன், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். பார்ப்போம் எத்தனை பேரை கட்சியில் இருந்து எடுக்க முடியும் என என்று சசிகலா தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் மறைவில் இருந்து கட்சியை பார்த்து கொண்டுதிருப்பதாகவும், பழைய நிலை அதிமுகவில் திரும்பும் என்றும், இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையை நிச்சயம் சரி செய்வேன் என்று சசிகலா உறுதியளித்துள்ளார்.

மேலும், கடந்த 2021-இல் துரோகிளால் தோற்றோம் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து சசிகலா பேசியுள்ளார். அதாவது, யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும் என்றும்,  நான் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பத்திலேயே தொடங்கி விட்டேன். உங்களுக்கு சிறுவயது என்பதால் அதெல்லாம் தெரியாது என்று கூறியுள்ளார். அத்துடன், அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை என்றும் என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும். எப்படி நான் டீல் செய்வேன் என்று.பொறுமையாக இருங்கள். என் அனுபவம் என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இப்போது இருப்பது போல நானும் ஜெயலலிதாவும் ஸ்பூன் பீடிங்கில் வந்தவர்கள் இல்லை என்றும், தலைவர் மறைவு,  அதன் பின்பு அதிமுக இக்கட்டான காலகட்டத்தில் இருந்த போது ஜெயலலிதாவை திட்டியவர்கள் எதிர்த்தவர்களை கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கியுள்ளோம். என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும். ஆனால், அது தனியாக தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எங்களை போன்ற எதிர்க்கட்சிகள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்என்றும், திமுக ஆட்சியின்போது பலஆயிரம் வாக்குகளை நீக்கினார்கள். அவர்கள் மோசடி செய்தார்கள் எனவும் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala assures that she will definitely unite the AIADMK


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->