அதிரடி காட்டும் சாம்சங் நிறுவனம் - அச்சத்தில் ஊழியர்கள்.!
samsung company employees lay off
200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக சாம்சங் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால், ஊழியர்கள் பயத்திலேயே உள்ளனர்.
பொதுமக்களிடம் சாம்சங் தயாரிப்புகளுக்கு போதுமான டிமாண்ட் இல்லாததால் இதன் விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டு சந்தை பங்கீட்டை இழந்து வருகிறது. மேலும், இந்தியச் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற முடிவில் சாம்சங் நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் பணியாற்றும் 200 நிர்வாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைத்து லாபத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இந்த பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்படப் போவது ஸ்மார்ட்போன், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்சஸ், சப்போர்ட் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் ஆகும். சாம்சங் இந்திய நிர்வாகத்தில் சுமார் 2000 பேர் பணியாற்றி வரும் நிலையில், இந்த பணிநீக்கம் மூலம் 9 – 10 சதவீதம் பேர் பாதிக்கப்படவுள்ளனர்.
English Summary
samsung company employees lay off