சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் காலமானார்! - Seithipunal
Seithipunal


சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஷபிகுர் ரஹ்மான் பார்க் (வயது 93) உடல்நல குறைவால் இன்று உயிரிழந்து விட்டார். 

சம்பல் மக்களவைத் தொகுதியின் எம்.பி ஆக இருந்த இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இவரை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். 

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் பல முறை எம்.பி ஆன ஷபிகுர் ரஹ்மான் பார்க் மறைவு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samajwadi Party Senior leader passed away


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->