ஐயப்பன் கோவில் : பாதுகாப்பு போலீசாருக்கு இலவச உணவு கிடையாது.! அதிரடி உத்தரவால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம்  மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்து 500 முதல் மூன்றாயிரம் போலீசார் வரை பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

இதற்காக 15 நாள்கள் கோவிலில் தங்கி பணியாற்றும் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் தொற்றின் காரணமாக கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் குறைந்ததால் அந்த செலவை அரசே ஏற்று வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் காவலர்களுக்கு இலவச உணவு கிடையாது என்றும், இதற்காக அவர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிக்கவும் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறை அமைப்புகள் முதலமைச்சரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimalai temple security police free food stop


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->