சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. இன்று முதல் அதிரடி மாற்றம்.!  - Seithipunal
Seithipunal


சபரிமலையில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காக பம்பையில் ஐயப்ப பக்தர்களை நிறுத்தி குழுவாக அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலில் இன்று முதல் தரிசனத்திற்கு 1,07,260 நபர்கள் முன்பதிவு செய்து இருக்கின்றனர். இத்தகைய நிலையில், சன்னிதான காவல்துறை சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாத் நாயக் பேசுகையில், "பக்தர்களுக்கு இடையில் ஏற்ப்படுகின்ற கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பம்பை பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படவுள்ளனர்.

அதன், பிறகு அவர்கள் சிறு சிறு, குழுக்களாக சபரிமலையேறுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், மர கூட்டத்திலிருந்து சன்னிதானம் வரை பெரும் நெரிசல் ஏற்படுகின்றது. இதை கட்டுப்படுத்த இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. 

அதிக நேரம் காத்து கொண்டு நிற்பதால் அவர்கள் சோர்வடைகின்ற காரணத்தால் அவர்களுக்கு சுக்கு நீர் ஆகியவை வழங்குவதற்காக அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சன்னிதான கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சாமி தரிசனம் செய்கின்ற பக்தர்கள் அனைவரும் உடனே மலையிறங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimalai Bakthas Attention for Today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->