மகர ஜோதியாய் 3 முறை அருள் தந்த ஐயப்பன்.. விண்ணைப்பிளந்த சரணம் ஐயப்பா கோஷம்.! - Seithipunal
Seithipunal


சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையானது இன்று சிறப்பாக நடைபெற்றது. பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரன பவனி மாலை சுமார் 5.30 மணியளவில் சரங்குத்தி வந்தது. இதன்பின்னர் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரியின் வரவேற்பிற்கு பின்னர், சன்னிதானத்திற்கு வந்தது. 

மாலை சுமார் 6.25 மணியளவில் 18 ஆம் படியின் வழியாக சோபனத்திற்கு வந்து, தந்திரி மற்றும் மேல் சாந்தி திருவாபரணம் வாங்கி வந்து ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தீபாதாரனை நடைபெற்றது.  

தீபாதாரனை முடிந்த சில வினாடிகளுக்கு உள்ளாகவே, பொன்னம்பல மேட்டில் 3 முறை ஐயப்பன் மகர ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைக்கண்ட ஐயப்ப பக்தர்கள் சரண கோசத்தை எழுப்பினர். கொரோனா பாதிப்பு காரணமாக கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு, கட்டுப்பாடுடன் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி செய்யப்பட்டனர்.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala Iyapan Temple Magara Jothi 2021


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal