சட்டவிரோதமாக ஆபத்தான குகையில் குழந்தைகளுடன் வசித்து ரஷ்ய பெண்: கர்நாடகாவில் மீட்பு..!
Russian woman rescued in Karnataka after illegally living in dangerous cave with children
கர்நாடகா மாநிலம் ராமதீர்த்தம் மலைப்பகுதியில் உள்ள ஒரு ஆபத்தான குகை ஒன்றில் வசித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த பெண் மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
கர்நாடகாவின் ராமதீர்த்தம் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் பகுதியில் குகை ஒன்று அமைந்துள்ளது. விஷப்பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலைப்பகுதியாகும். இந்த பகுதிகளில் சுற்றுலாவுக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, போலீசார் ஆய்வு செய்தனர்.
-hw9xu.png)
அப்போது அந்தபகுதியில் பெண்ணின் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அவரது பெயர் நினா குடினா(40) என்பதும் ரஷ்யாவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவருடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது தெரியவந்தது.
குறித்த பெண் மற்றும் குழந்தைகள் ஆன்மிக ரீதியில் இந்தியாவந்துள்ளதாகவும், தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு அமைதியான இடத்தை தேடி வந்தபோது இங்கு வந்து தங்கியதாக தெரிவித்துள்ளார்.. இதனையடுத்து அந்த இடத்தில் நிலவும் ஆபத்து குறித்து போலீசார் விளக்கியுள்ளனர். மேலும், அவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று ஆன்மிக மடம் ஒன்றில், அவரின் கோரிக்கைப்படி தங்க வைத்துள்ளனர்.
-48wrv.png)
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் நினாவின் ஆவணங்கள் குகை பகுதியில் தொலைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பகுதிக்கு மீண்டும் சென்ற போலீசார், அவரின் ஆவணங்களை தேடி கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அவரின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஆய்வு செய்தில், கடந்த 2017-ஆம் ஆண்டு வர்த்தக விசாவில் நினா இந்திய வந்துள்ளார். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-இல் காலாவதியாகியுள்ளது. அதுவரை ஆவர் கோவாவில் தங்கியிருந்துள்ளார். மீண்டும் சென்ற அவர் நேபளாளம் வழியாக மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது.
இதனையடுத்து பெண்கள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, குழந்தைகளுடன் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
English Summary
Russian woman rescued in Karnataka after illegally living in dangerous cave with children