ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வர உள்ளார்..!
Russian President Putin is going to come to India
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றுள்ள நிலையில், ரஷிய அதிபர் புதினை நேரில்சந்தித்துள்ளார். அப்போது அவரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக, ரஷிய அதிபர் புதின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புதின் இந்திய வருகைக்கான தேதிகள் இறுதி செய்யப்படுகின்றன என்று பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பிரதமர் மோடி சீனா செல்வதற்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50 வீதம் வரி கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பயணத்தை தொடர்ந்து வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கரும் இந்த மாத இறுதியில் ரஷியா செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
Russian President Putin is going to come to India