'சமூகத்தில் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் எளிதில் சென்று சேர வேண்டும்': ஆர்எஸ்எஸ் தலைவர் வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர்  ஏழை, எளிய மக்களுக்கும் எளிதில் மருத்துவ வசதிகள் கிடைக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும்,பேசுகையில் கூறியதாவது;

சமூகத்தில் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் எளிதில் சென்று சேர வேண்டும் என்றும், ஏராளமான நகரங்களில் இந்த வசதி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், வர்த்தகமயமாக்கல் என்பது மையமாகி விட்டது நிலையில்,  தற்போது பெருநிறுவனங்களின் வணிகமயமாக்கல் சகாப்தம் என்பதின் கீழ் கல்வி நிறுவனங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்பு எல்லாம் ஒவ்வொரு மாகாணத்திலும் கல்வி மையங்கள் இருந்தன. அனைத்து தரப்பு மக்களும் அங்கே தமது குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவார்கள். குழந்தைகளும் அங்கு கல்வி கற்பார்கள். ஆனால், தற்போது கல்வி மையப்படுத்தப்பட்டு விட்டதால் அவர்கள் படிப்புக்காக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டி இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மருத்துவ சிகிச்சை கிடைப்பதிலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது என்று கவலை தெரிவித்துள்ளார். 

மேலும், நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் நகரை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டில்லியில் புற்றுநோய் சிகிச்சைக்காக 08 முதல் 10 மருத்துவமனைகள் உள்ளன. எனவே சிகிச்கைக்காகவும், தங்குவதற்காகவும் பல செலவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும், எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய வகையில் மருத்துவ வசதி தேவைப்படுகிறது. இதற்கு தீர்வு என்ன..? சேவை மனப்பான்மையுடன் அதைச் செய்வது தான் அடிப்படைத் தீர்வு என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RSS leader urges easy access to medical facilities for everyone in society


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->