காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு..! - Seithipunal
Seithipunal


ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவரை சந்தித்துப் பேசியதால், ஆர்.எஸ்.எஸ்., தன் கொள்கையில் இருந்து விலகிச் சென்று விடவில்லை' என்று காங்கிரசுக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், முஸ்லிம் சமூகத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, ஏற்கனவே முஸ்லிம் அறிஞர்கள், கல்வியாளர்கள் பலரை சந்தித்து பேசி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாகத்தான் பாகவத், நேற்று முன்தினம் புதுடில்லியில் கஸ்துாரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதிக்கு சென்று, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. 'ராகுல் நடத்தும் ஒற்றுமை யாத்திரையின் தாக்கத்தின் காரணமாகவே, இமாம் அமைப்பின் தலைவரை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சந்தித்துப் பேசியுள்ளார். 'ஆர்.எஸ்.எஸ்., தன் கொள்கையில் இருந்து விலகிச் செல்கிறது' என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாக குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் தெரிவித்ததாவது:

"ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையை காங்கிரஸ் கட்சி தவறாக புரிந்து வைத்துள்ளது. இதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஆர்.எஸ்.எஸ்., கொள்கையில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் -க்கு எந்த காலத்திலும் ஒரே கொள்கை தான்.

20 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிறுபான்மை சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை  நடத்துவது என்பது, முன் எடுக்கப் பட்ட ஒரு முயற்சி ஆகும். அதன் தொடர்ச்சியின் காரணமாகவே இமாம் அமைப்பின் தலைவருடன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சந்திப்பு நடந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS leader meet all india imam leader


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->