புதுச்சேரி - இசிஆர் சாலையில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்; 8 பேர் கொண்ட கும்பலால் ரௌடி வெட்டிக் கொலை..!
Rowdy hacked to death by an eight member gang in broad daylight on Puducherry ECR Road
புதுச்சேரி- இசிஆர் சாலையில் பட்டப்பகலில் ரௌடி ஆனந்த் என்பவரை 08 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோயில் அருகே வசித்து வந்தவர் ஆனந்த் (எ) முண்டகண்ணு ஆனந்த் (32). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன.
இன்று காலை இசிஆர் சாலையில் தனியார் மண்டபம் அருகே இருசக்கர வானத்தில் ஆனந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 08 பேர் கொண்ட கும்பல் ஆனந்தை வழிமறித்து சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி வம்சீத ரெட்டி, லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆனந்தின் உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவீனா கார்டன் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர விசாரணைக்கு பிறகே உண்மை தெரியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Rowdy hacked to death by an eight member gang in broad daylight on Puducherry ECR Road