இந்திய சட்ட ஆணையத்தின் புதிய தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 

"இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை நியமனம் செய்வதில் மகிழ்கிறோம். இதேபோன்று, சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக நீதிபதி கே.டி. சங்கரன், பேராசிரியர் ஆனந்த் பாலிவால், பேராசிரியர் டி.பி. வர்மா, பேராசிரியர் ராகா ஆர்யா மற்றும் எம். கருணாநிதி உள்ளிட்டோரும் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி முதல் 2022-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி வரை ரிதுராஜ் அவஸ்தி பணிபுரிந்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக 2009-2021 ஆண்டுகள் வரை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணி புரிந்துள்ளார். 

கடைசியாக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற பின்னர் அந்த பதவிக்கான நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில், இந்த சட்ட ஆணையம், சட்ட நிபுணர்களை கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில், செயல்பட்டு, சட்டரீதியாக ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு சட்ட சீர்திருத்தத்திற்கான ஆலோசனை வழங்கும் பணியை இந்திய சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rituraj Awasthi as new Chairman of Law Commission of India


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->