கெத்து காட்டும் இஸ்ரோ..! மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலம் சோதனை வெற்றி..!! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப்படை மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை இணைந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிய வகை மாதிரி விண்கலத்தை கர்நாடகாவின் சித்திரதுர்கா ஏரோநாட்டிக்கல் மையத்தில் இஸ்ரோ இன்று காலை சோதனை செய்தது. இதில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தின் சோதனை வெற்றி பெற்றது.

தற்பொழுது இந்தியாவால் விண்வெளிக்கு ஏவப்படும் அனைத்து விண்கலங்களும் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் இந்தியாவிற்கு அதிக அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தின் மாதிரி சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ அதிகாரி "இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட விண்கலமானது செயற்கைக்கோள்களை விண்ணில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலான விண்கலம் இந்தியாவில் தயாரிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது" என இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reusable RLV Missile Test successed by ISRO


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->