நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
residence certificate to dog in bihar
பிஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவின் சவுரி பகுதியில் ‘டாக் பாபு' என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழில் டாக் பாபுவின் தந்தை பெயர் குடா பாபு என்றும் தாயின் பெயர் குடி தேவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழில் பிஹார் வருவாய் துறை அதிகாரி முராரி சவுகான் கையெழுத்து மற்றும் நாயின் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு சான்றிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலானதைத் தொடர்ந்து நாய்க்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழை பிஹார் வருவாய் துறை நேற்று ரத்து செய்தது.
மேலும் நாயின் பெயரில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. தவறிழைத்த அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை தெரிவித்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
residence certificate to dog in bihar