நீங்க போன் பேசுங்க, பேசாம போங்க, ஆனா எங்களுக்கு பணம் கட்டியே ஆகணும்..! விழிபிதுங்கும் வாடிக்கையாளர்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தொலைதொடர்பு துறையில், ஜியோ நிறுவனம் காலடி எடுத்து வைத்த பிறகு மற்ற நிறுவனங்களிலும், தொலைத் தொடர்புத் துறையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஜியோ நிறுவனம் பல்வேறு இலவச திட்டங்களை மிக குறுகிய காலத்திலேயே அளித்தது, இதனால் ஜியோ நிறுவனத்திற்கு பல கோடி வாடிக்கையாளர்கள் பெற்று தந்தது.

இதனால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் சில தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டது. இதில் ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ஜியோவின் போட்டியை சமாளித்து, அந்த நிறுவனங்களும் சில திட்டங்களை கொடுத்து வருகிறது.

jio, airtel, seithipunal

மேலும் ஜியோக்கு போட்டியாக கட்டணங்கள் குறைப்பு இலவசத் திட்டங்கள் என்ற பல நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் அந்த நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் கட்டாயம் கட்டணத்தை உயர்த்தி ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்தது.

இதன் காரணமாக ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் மாற்றி, மாற்றி புதிய கால், டேட்டா திட்டங்கள் என்று நேற்று அறிவித்தாது . இதில் இந்த புதிய திட்டங்களுக்கு கட்டணம் முந்தைய திட்டங்களை விட அதிகமாக இருக்கிறது.

வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களது மாதாந்திர குறைந்த பட்ச கட்டணம் 35 ரூபாயிலிருந்து, 45 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இந்த திட்டம், டிசம்பர் 3ஆம் தேதி பிறகு தொடர்ந்து தொலைத் தொடர்பை பயன்படுத்த வேண்டுமென்றால் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 45 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது கட்டாயமானது.

இதனால் தோலைபேசி தற்போது பொதுமக்களுக்கு தொல்லை பேசியாக மாறியுள்ளது. இதனால் மக்கள் எந்த நிறுவனம் சென்றாலும் கட்டணம் அதிகமாக இருக்கிறதே என்று விழிபிதுங்கி இருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

recharge rate increase for artil network


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->