பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை.! முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முக்கியமான பண்டிகையான தீபாவளி இன்னும் 12 நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை மக்கள் ஆரவாரமாக கொண்டார்கள். ஆனால், இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும், பொருளாதாரரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையை கோலாகலம் இல்லாமல் கொண்டாட உள்ளனர். 

மேலும் பல மாநிலங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிப்பதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், பட்டாசுகளில் இருந்து வெளிவரும் விஷப் புகை காரணமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக மாநிலம் முழுவதும் பட்டாசு விற்பனை செய்வதை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan govt ban fireworks


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal