10 நிமிடம்.. பசியால் கதறிய குழந்தை.. விரைந்து செயல்பட்ட அதிகாரி.. பரபரப்பு வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க ஷர்மிக் சிறப்பு இரயில்கள் சேவை துவங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பு இரயில்களில் பயணம் செய்யும் நபர்களுக்கு உணவுகள் சரிவர வழங்கப்படுவது இல்லை என்ற குற்றசாட்டுகள் எழுந்தது. 

இந்நிலையில், நான்குமாத குழந்தைக்கு பெற்றோர்கள் பால் இல்லாமல் தவித்த நிலையில், ஆர்.பி.எப் காவல் அதிகாரி இரயில் புறப்பட்ட பின்னர், இரயிலுக்கு பின்னால் ஓடி குழந்தையின் பெற்றோரிடம் பால் பாக்கெட்டை வழங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காமில் இருந்து, உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு இரயில் சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த இரயிலில் ஷரீப் சஹாஷ்மி என்ற பெண்மணி, அவரது கணவர் ஹாஷினுடன் பயணம் செய்துள்ளார். இவர்களுக்கு நான்கு மாத குழந்தை இருக்கிறது.

இந்த இரயில், கடந்த 31 ஆம் தேதியன்று போபால் இரயில்வே நிலையத்திற்கு அருகில் வந்த நிலையில், இதற்கு முன்னர் இரயில் நின்ற நிலையத்தில் பால் விற்பனை செய்யப்படாத நிலையில், குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்துள்ளது.

பின்னர் போபால் இரயில் நிலையத்தில் இருந்த ஆர்.பி.எப் அதிகாரி இந்தர் சிங்கிடம் இது குறித்து தெரிவிக்கவே, நிலைமையை உணர்ந்த இந்தர் சிங் குழந்தைக்கு பால் பாக்கெட் வாங்க முடிவு செய்துள்ளார். 

இரயில் நிலையத்தில் பால் பாக்கெட் இல்லாத சூழலில், வெளியே இருக்கும் கடைக்கு சென்று பால் பாக்கெட்டை வாங்கி வந்துள்ளார். இவர் இரயில் நிலையத்திற்கு நுழைந்ததும், இரயில் புறப்பட துவங்கியுள்ளது. இதனையடுத்து மின்னல் வேகத்தில் விரைந்து செயல்பட்டு, வேகமாக ஓடி பெண்ணிடம் பால் பாக்கெட்டை வழங்கியுள்ளார். 

இரயிலில் தொடர்ந்து முன்னே செல்ல, குழந்தையின் பெற்றோர்கள் காவல் அதிகாரிகளுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்து சென்றனர். இந்த விஷயம் தொடர்பான காட்சிகள் இரயில் நிலையத்தில் இருக்கும் சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த இரயில்வேத்துறை மந்திரி பியூஷ் கோயல், ஆர்.பி.எப் அதிகாரி இந்தர் சிங்கை பாராட்டி சன்மானம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railway Police give milk for baby hungry and cry in Sharmik train at Bhopal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->