ராஜஸ்தான் விவகாரம், களமிறங்கும் ராகுல்காந்தி?! காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளியான புதிய தகவல்!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது போலவே, ராஜஸ்தான் மாநிலத்திலும்  காங்கிரஸ் கட்சியின் ஆட்சி ஆனது ஆட்டம் காணும் சூழல் நிலவுகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் டிற்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் க்கும் இடையே அதிகார போட்டியானது ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கட்சியின் தலைமை உத்தரவையடுத்து அசோக் கெலாட்  தொடர்ந்து முதல் அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.  இதற்கிடையே இருவருக்கும் இடையிலான உரசல் ஆனது தற்போது முற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அன்மையில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்களை  விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக செய்திகள் வெளியான நிலையில், பாஜக இதனை மறுத்தது. இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் சொகுசு விடுதிகளுக்கு அழைத்து சென்று வைத்திருந்த முதலமைச்சர்,  மாநிலங்களவை தேர்தல் முடியும் வரை சொகுசு விடுதியில் இருந்து எவ்வித சிக்கலுமின்றி தேர்தல் முடிந்தது.  

தற்போது அஇருவருக்கும் இடையேயான மோதல் முற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது சச்சினிடம் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ க்களும் சில சுயேச்சை  எம்எல்ஏக்களும் அவர் என்ன முடிவெடுத்தாலும் ஆதரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சியானது அங்கு ஆட்டம் காணும் சூழல் நிலவுகிறது. 

சச்சின் பைலட் தன்னுடைய ஆதரவு எம் எல் ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அவர் யாரிடமும் கூறாமல் மாநிலம் தாண்டி சென்றதாக அவர் மீது, அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு படை நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி எந்த ஒரு நோட்டீஸ் வழங்கவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது  200 சட்டமன்ற தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் காங்கிரஸ் வசம் 107 இடங்கள் உள்ளன. அதன் கூட்டணி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்த்து மொத்தம் 124 இடங்களுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. மொத்தமாக 30 எம்.எல்.ஏக்களுக்கு மேல் சென்றுவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் இழப்பு ஏற்படும் என்பதால், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி உடனடியாக தலையிட்டு சச்சின் பைலட் உடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. .

இந்த நிலையில்தான், ராஜஸ்தானில் இருந்து சச்சின் பைலட்டுடன் டெல்லி சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இதனால், முதலமைச்சர் அசோக் கெலோட் தலைமையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi involved in rajasthan political issue


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal