ஜப்பானில் 24-ம் தேதி குவாட் மாநாடு.. பிரதமர் மோடி பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இரண்டாவது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்தநிலையில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் மே 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இந்தோ பசிபிக் பிராந்திய நிலவரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலக பிரச்சினைகள் குறித்து குவாட் தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ள இம்மாநாடு நல்ல வாய்ப்பாக அமையும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Quad conference in Japan on the 24th Prime Minister Modi's participation


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->