போராட்டத்தைக் கைவிட்ட பஞ்சாப் பல்கலைக்கழக மாணவிகள் : 6 நாட்களுக்கு வகுப்புகள் ரத்து..! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக தெரிவித்து, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். 

மாணவிகளின் விருப்பமில்லாமல் சமூகவலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக மாணவர்களின் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 24 வரை 6 நாட்களுக்கு வகுப்புகளை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

மாணவிகளிடம் அமைதி காக்குமாறு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத்சிங் பைன்ஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதி வார்டன்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் மற்றும் விடுதி நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. 

இதுவரை, பல்கலைக்கழக மாணவிகளின் விருப்பமின்றி வீடியோக்களை தயாரித்து பரப்பியதாக மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு மாணவி மற்றும் அவரது 23 வயது ஆண் நண்பன் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjap college students vedio case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->