பள்ளி பாடப்புத்தகத்தில் பிரபல நடிகரின் வாழ்க்கை வரலாறு.. அரசு ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். சிறு வயது முதலே பல திரைப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்றுள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள் மற்றும் 4800 குழந்தைகளின் படிப்புக்கான செலவையும் ஏற்றுள்ளார்.

நிலையில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை வரலாற்றை 4 அல்லது 5ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்குமாறு அரசை வலியுறுத்தி பல தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும் பெங்களூரு மாநகராட்சியின் கல்வித் துறைக்கு கடிதம் வைத்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறுகையில், பள்ளி பாடப்புத்தகத்தில் வாழ்க்கை வரலாறு சேர்ப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது குறித்து அரசிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punit Rajkumar history in school books


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->