"வழுக்கையை மறைக்க விக் வைத்தார்" ₹17 கோடி திருமணத்தை நிறுத்தி, வருங்கால கணவரைக் கொன்ற இளம்பெண்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கேட்டன் அகர்வால், லோகாகாட் கோட்டையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், அது விபத்து அல்ல; வருங்கால மனைவியே தனது காதலனுடன் இணைந்து நடத்திய திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது போலீஸாரின் அதிரடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

₹17 கோடி பிரமாண்ட திருமண ஏற்பாடு

கேட்டன் அகர்வாலுக்கும், 20 வயதான ஜியா கோயல் என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. வரும் நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் சுமார் ₹17 கோடி செலவில் மிக பிரமாண்டமாக இந்தத் திருமணம் நடைபெறவிருந்தது. விருந்தினர்களை அழைத்து வர இரண்டு தனியார் விமானங்கள் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஜூன் 18 அன்று இந்த வருங்கால தம்பதியினர் இருவரும் விடுமுறையைக் கழிப்பதற்காக மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற லோகாகாட் கோட்டைக்குச் சென்றுள்ளனர். அங்கு கோட்டையின் உயரமான பகுதியில் இருந்து கேட்டன் தவறி விழுந்து இறந்ததாக முதலில் கூறப்பட்டது.

காதலனுடன் ஒத்திகை பார்த்துப் படுகொலை

போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், ஜியா கோயல் தனது 22 வயது காதலனான சேட்டன் சவுத்ரியுடன் இணைந்து கேட்டனை கோட்டையிலிருந்து கீழே தள்ளிவிட்டுக் கொன்றது தெரியவந்தது. இன்று ஜியாவை நேரடியாக அந்தக் கோட்டைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், குற்றச்சம்பவத்தை மீண்டும் அரங்கேற்றிக் (Re-creation) காட்டச் செய்து ஆய்வு செய்தனர். அப்போது, போலீஸில் மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி என்று ஜியா கூகுளில் (Google Search) தேடிய அதிர்ச்சித் தகவலும், கொலை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்பே காதலனுடன் அதே கோட்டைக்குச் சென்று ஜியா 'டெமோ' பார்த்து ஒத்திகை செய்ததும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

கொலைக்கு பின்பு தங்களது செல்போன் அழைப்புப் பதிவுகள் (Call Logs) மற்றும் தேடல் ஹிஸ்டரிகளை இருவரும் அழித்துள்ளனர். ஆனால், போலீஸாருக்கு அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், கேட்டனின் இறுதிச்சடங்கின் போது ஜியா எவ்வித வருத்தமும் இன்றி நடந்துகொண்ட விதம் மற்றும் விபத்து குறித்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதையைக் கூறியது கேட்டனின் சகோதரிக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் கொடுத்த புகாரின் பேரிலேயே போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி ஜியாவைக் கைது செய்தனர்.

வழுக்கைத் தலை தான் கொலைக்குக் காரணமா?

முதலில் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்த ஜியா, பின்னர் ஏன் கொலை செய்தார் என்ற கேள்விக்கு அவர் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேட்டனுக்குத் தலையில் வழுக்கை இருந்ததையும், அதனை மறைக்க அவர் 'விக்' (Hair Wig) பயன்படுத்தியதையும் திருமண நிச்சயம் முடிந்த பின்னரே ஜியா அறிந்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்தத் திருமணத்தை நிறுத்த விரும்பி, தனது காதலனுடன் சேர்ந்து இந்தக் கொடூரக் கொலையை அரங்கேற்றியதாகக் கூறியுள்ளார். இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான கொலைக் காரணம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pune Techie Murdered by Fiancée at Lohagad Fort After Hairpiece Discovery


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->