10th Result: தமிழகத்தை விட புதுச்சேரியில் தேர்ச்சி விகிதம் குறைவு.!!‌‌ - Seithipunal
Seithipunal


 தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 8,94,267 மாணவ மாணவிகளின் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.14 சதவீதம் அதிகமாகும். அரசு பள்ளிகளில் 87.97 சதவீத பேரும் தனியார் பள்ளிகளை 97.43 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அதேபோன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.14 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் புதுச்சேரியில் 91.28 சதவீதம் பேரும் காரைக்காலில் 78.2 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் புதுச்சேரியில் தேர்ச்சி விகிதமானது குறைவாகவே உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 14,952 மாணவ மாணவிகளின் 13,328 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டை விட தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும் கடந்த ஆண்டு காட்டிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் மொத்த தேர்ச்சி விழுக்காடு உயர்ந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry 10th result lesser than Tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->