பப்ஜி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இந்தியாவில் இன்று முதல் மீண்டும் பப்ஜி.! - Seithipunal
Seithipunal


பிரபல மொபைல் விளையாட்டு செயலியான பப்ஜி இந்தியாவில் இன்று முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.

தென்கொரியா நாட்டின் பிரபல விளையாட்டு செல்போன் செயலியான பப்ஜி உலக அளவில் பிரபலமானது. இந்த செயலியை இந்தியாவில் வெளியிடும் மற்றும் நிர்வகிக்கும் உரிமையை சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்திற்கு பப்ஜி நிறுவனம் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பாதுகாப்பு நலன் கருதி இந்திய அரசு பஜ்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பப்ஜி விளையாட்டால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்ததால் இந்த செயலி தடை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.


 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு பப்ஜி விளையாட்டை மாற்றி அமைத்து இன்று முதல் மீண்டும் இந்தியாவில் பப்ஜி செயலி செயல்பாட்டுக்கு வருகிறது.

அந்த வகையில் பப்ஜி செயலியை மீண்டும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pubg game return to India from today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->