மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - உ.பி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பிரியங்கா.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் 403 தொகுதிகளை கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் வரும் வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2017 தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் 114 இடங்களில் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. 

இதனையடுத்து, எதிர்வரும் தேர்தலை கணக்கில் வைத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உத்திர பிரதேச தேர்தலில் 40 % பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிரியங்கா காந்தியின் ட்விட்டர் பக்கத்தில், " உத்திரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Gandhi Announce Electric Scooter and Mobile for Girl Students UttarPradesh Election Resolution


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal