தேசத்திற்காக 30 நிமிடம் ஒதுக்குங்கள்! தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்! - Seithipunal
Seithipunal


நேரலை ஒளிபரப்பிற்கு முன் அனுமதி தேவையில்லை!

இந்திய தேசத்தின் நலன் மற்றும் முக்கியத்துவத்திற்காக 30 நிமிடங்கள் நிகழ்ச்சியினை ஒளிபரப்ப வேண்டும் என தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. 

அதில் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிற்கான வழிகாட்டுதல்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு திருத்தப்பட்டதற்கு பிறகு தற்போது அதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நடைமுறைகள் தற்பொழுது எளிதாக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சியின்  நேரலை ஒளிபரப்புக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இனி இருக்காது. ஆனால் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி குறித்தான விவரங்கள் முன்னதாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை 30 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி ஒளிபரப்ப வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prior permission not required for live broadcasting


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->