கர்நாடகா || துமகூரில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை.! பிரதமர் மோடி தொடங்கி வைப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கு மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். 

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார். கடந்த மாதம் உப்பள்ளி, யாதகிரி மற்றும் கலபுரகி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகத்திற்கு வருகை தருகிறார். அங்கு, பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நடைபெறும் இந்திய மின்சார வார விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 

அதை முடித்துக்கொண்டு அவர் ஹெலிகாப்டரில் துமகூருவுக்குச் செல்கிறார். அங்கு, எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய பசுமைகள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைக்க உள்ளார். 

இந்த தொழிற்சாலையில், முதல்கட்டமாக இலகுரக ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும். இங்கு 20 ஆண்டுகளில் மூன்று டன் முதல் பதினைந்து டன் எடை வரை ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மூலம் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும்.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூருக்கு வருகிறார். இதனால், பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

prime minister modi will start dumukuru helicopter factory


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->