கங்கா விலாஸ் சொகுசு கப்பலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் பயணத்தை பிரதமர் மோடி இன்று கொடியசத்து துவங்கி வைக்கிறார். 52 நாட்களில் 27 நதிகள் வழியாக 3,200 கிமீ தூரம் பயணிக்கும் கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வாரணாசியில் புறப்பட்டு பாட்னா, கொல்கத்தா வழியாக பங்களாதேசம் தலைநகர் தாக்கா சென்றடையும்.

பின்பு அங்கிருந்து புறப்பட்டு கப்பலின் பயணம் அசாமின் திப்ரூகார் நகரில் முடிவடையும். மேலும் இந்த கப்பலில் இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, திறந்தவெளி கண்காணிப்பு தளம், தனிப்பயனாக்கப்பட்ட சேவை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள் ள இந்த கப்பல் பொ சுந்தரவன டெல்டா, பீகாரில் கைவிடப்பட்ட புத்த மடாலயம், காசிரங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயம் வழியாகவும் பயணிக்க உள்ளது.

மேலும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் தொடங்கிவைக்கும் பிரதமர், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi will inaugurate the Ganga Vilas luxury ship today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->