3 நாள் பயணமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி..!
Prime Minister Modi will be on a 3 days visit to South Africa to participate in the G20 summit
ஜி 20 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளதாகவெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வரும் நவம்பர் 21 முதல் நவம்பர் 23-ஆம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக ஜோகன்னஸ்பர்க் செல்லவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த ஜி 20 மாநாட்டில் 03 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேரவுள்ளதாகவும், இந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உரையாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார். தொடர்ந்து, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Prime Minister Modi will be on a 3 days visit to South Africa to participate in the G20 summit