பிரதமர் மோடி திடீர் லடாக் பயணம்.. கலக்கத்தில் சீனா.!! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் கடந்த மாதம், சீன இராணுவத்தின் அத்துமீறல் நடைபெற்றது. இந்த அத்துமீறலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எத்தனை பேர் என்பது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இல்லை. 

இந்த மோதல் போக்கின் காரணமாக எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் காணவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அமைதி பேச்சுவார்த்தையில் சம்மதம் தெரிவித்த சீனா சப்தமே இல்லாமல் தனது படைகளை எல்லையில் குவித்து வந்தது அம்பலமானது. 

இதனையடுத்து இந்தியாவும் தனது படை அனைத்தையும் எல்லை பகுதிக்கு நகர்த்தி வந்தது. இந்த விஷயம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர் இன்று லடாக் பகுதிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் முப்படை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடியும் லடாக்கிற்கு சென்றுள்ளார். அங்கு இராணுவ வீர்ர்களை சந்தித்த மோடி, எல்லையின் நிலவரம் தொடர்பாக கேட்டறிந்து வருகிறார். பிரதமர் மோடியின் திடீர் லடாக் பயணம் சீனாவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi went Ladakh


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->