மன் கி பாத் நிகழ்ச்சியில் தஞ்சை மணிமாறனை பாராட்டிய பிரதமர் மோடி.!! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். அந்த வகையில், இந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் சிறந்த தமிழ் ஓலைச்சுவடிகளையும், கலாசாரத்தையும் பாதுகாப்பது, பிரபலப்படுத்துவது என்ற குறிப்பிடத்தக்க முயற்சியில் திரு மணி மாறன் முன்னணியில் உள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தன்னை பாராட்டி பேசியதை கேட்ட மணிமாறன், அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் என்று பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த தஞ்சை மணிமாறன் யார்?

தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக, தமிழ்பண்டிதர் தான் மணிமாறன். இவர் தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், வரலாற்று நோக்கில் தமிழிலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

prime minister modi praises thanjai manimaran in mann ki baat


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->