இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி..!
Prime Minister Modi is leaving for Israel on a two days visit
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இஸ்ரேல் செல்லவுள்ளார். அதன்படி, வரும் 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதிக்கு அவர் இஸ்ரேல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் "பாராளுமன்ற உரை விரைவில் நடக்க இருக்கிறது. யார் இங்கே வருகிறார்..? இந்திய பிரதமர் மோடி" எனத் குறிப்பிட்டார்.
அத்துடன், இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய கூட்டணி உள்ளது என்றும், அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் பற்றி நாம் விவாதிக்கப் போகிறோம் என்று அறிவித்தார்.
மேலும், இப்போது இந்தியா ஒரு சிறிய நாடு அல்ல என்று உங்களுக்கு தெரியும், இந்தியா 1.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது மற்றும் மிகவும் சக்திவாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளதோடு,மிகவும் பிரபலமான நாடு என்று பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modi is leaving for Israel on a two days visit