'மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்': பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி..!
Prime Minister Modi assures that the National Democratic Alliance will form the government again in Bihar
பீஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பதை, சாதனை படைத்த ஓட்டுப்பதிவு எடுத்துரைக்கிறது என அவுரங்காபாத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
அங்கு பிரமர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: எதிர்க்கட்சிகளின் பொய்களை மக்கள் நிராகரித்துள்ளனர். பீஹாரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.முதல் கட்ட தேர்தலில் கிட்டத்தட்ட 65 சதவீத ஓட்டுப்பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பீஹாரில் காட்டாட்சி ராஜ்ஜியத்தை மக்கள் கொண்டு வர விரும்பவில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி ஒருபோதும் பேசுவது இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களின் அந்த வாக்குறுதிகள் பொய்யானது எனவும், தன் மீதும், முதல்வர் நிதிஷ் குமாரின் சாதனைகள் மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, முதல்வர் நிதிஷ் குமார் சுமூகமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஓய்வுபெற்ற பாதுகாப்பு வீரர்களின் கணக்குகளில் ரூ.1 லட்சம் கோடியை செலுத்தினோம். பீஹார் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி காங்கிரஸ், ஆர்ஜேடி யோசிக்க முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நாங்கள் பணம் வரவு வைத்தோம். அரசாங்கம் அதைத் திரும்பப் பெறும் என்று ஆர்ஜேடி பொய்களைப் பரப்பியது என்றும் தெரிவித்துள்ளார். ஆர்ஜேடி கட்சியின் தலைவர்கள் பீஹாரை இருளில் ஆழ்த்தியதாகவும், 35-40 ஆண்டுகளில் வெல்லாத இடங்களை ஆர்ஜேடி காங்கிரசுக்கு வழங்கியுள்ளது என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
English Summary
Prime Minister Modi assures that the National Democratic Alliance will form the government again in Bihar