வயிற்றில் எட்டி உதைத்த கணவன் - கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு.!!!
pregnant lady sucide in kerala
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் கணவர் - மாமியார் சித்ரவதை காரணமாக கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூரைச் சேர்ந்தவர் நௌஃபல் - ஃபசீலா தம்பதியினர். இதில் ஃபசீலா நேற்று முன்தினம் தனது தாய்க்கு வாட்ஸ்அப் மூலம் தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும், அதற்கான காரணங்களையும் விவரித்துள்ளார்.

மேலும், அந்த செய்தியில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், தனது கணவர் தனது வயிற்றில் பலமுறை எட்டி உதைத்ததாகவும் மாமியாரும் தன்னை கொடுமை படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு ஃபசீலாவின் குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு வருவதற்குள் ஃபசீலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகள் உயிரிழந்த நிலையில் இருப்பதை பார்த்த அவர்கள் கதறித் அழுதனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஃபசீலாவின் கணவர் நௌஃபல் மற்றும் அவரது தாய் ரம்லாவைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pregnant lady sucide in kerala